கோபக்காரர்கள் நான்கு வகை!
உத்தமே
ச க்ஷணம் கோப:
மத்யமே கடிகாத்வயம்
அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக:
க்ஷணம்
என்றால் ஒரு நொடி/வினாடி
முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும்.
கடிகா
என்றால் 24 நிமிடங்கள்
இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.
கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும் — 24 மணி நேரம் — நீடிக்கும்.
இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.
ஆனால் பாபிகளுக்கோ வாழ்நாள் முழுவதும் கோபம் நீடிக்கும். அதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் மனதில் கரு வைத்திருப்பவன் மஹா பாவி.
இந்த நான்கு வகைகளில் நாம் முதல் வகையைச் சேர்ந்திருப்பது நல்லது.
இதை வள்ளுவனும்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது – குறள் 29
நொடி= க்ஷணம்= கணம்
குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.
கோபத்தால் வருபவை எட்டு
பைசுனம் சாஹசம் த்ரோஹ ஈர்ஷ்யா அசூயா அர்த்ததூஷணம்
வாக்தண்டஜம் ச பாருஷ்யம் க்ரோத ஜனோபி கணோஷ்டக:
மனு 7-48
கோபத்திலிருந்து பிறக்கும் எட்டு தீய குணங்கள்:– அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல்.
கர்ம சண்டாளர்கள் யார்?
பிறப்பினால் சண்டாளர்கள் யார் என்பதை நாம் அறிவோம்.
தொழில் ரீதியில் , தாங்கள் செய்யும் செயல்களால், சண்டாளர் நிலைக்குத் தாழ்பவர் யார் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் விளக்குகிறது:–
தூஷகஸ்ச க்ரியாசூன்யோ நிகஷ்டோ தீர்ககோபன:
சத்வார கர்ம சண்டாலா ஜாதிசண்டால உத்தம:
பிறரைக் காரணமில்லாமல் திட்டுபவன் (பொறாமை காரணமாகவோ,வெறுப்பு காரணமாகவோ)
சாத்திரப்படி விதிக்கப்பட்ட வழிபாடுகளை விட்டவன்
பேராசைக்காரன்
நீண்ட காலத்துக்கு கோபத்தைத் தக்கவைப்பவன்
ஆகிய நால்வரும் செய்யும் தொழிலால் சண்டாளர் நிலைக்குத் தாழ்ந்து விடுவர்.
Compiled by London Swaminathan
No comments:
Post a Comment