கோபம் என்றால் என்ன? 
உணர்ச்சி, பயம், பதட்டம், அச்சம், விரக்தி, சோகம்
போன்ற பல வகை உணர்ச்சிகளின் கூட்டு என்று சொல்லலாம்.மொத்தத்தில் அது ஒரு வகை
எதிர்மறையான உணர்ச்சி என வகைப்படுத்தலாம்.
ஆனால் இப்படி கோபம்
என்பது ஒரு எதிர்மறையான உணர்ச்சி என்று சொன்னால் கோபம் உள்ளவர்களுக்கு நிறைய கோபம் வந்து
கேட்கிறார்கள்,எப்படி நீங்கள் அதை எதிர்மறையானது என சொல்லலாம் என்று.
அவர்கள் கிடையாது அது
வீரம் என்ற பாசிடிவ் அல்லது நேர்மறையான நன்மை தரும் உணர்ச்சியே
கோபம்,ருத்ரம் என்று
மறுப்பார்கள் சண்டைக்கு வருவார்கள்.
எனவே சமாதானமாக
இரண்டும் கலந்ததொரு இடைப்பட்ட உணர்ச்சி என வைத்து கொள்வோம்.
இன்னும் சொல்லபோனால்
கோபத்தை இரு வகைபடுத்தலாம்.
நியாயமானது அநியாயமானது. ஆனால்
இதில்தான் சிக்கல் ஒருவருக்கு நியாயமாகபடுவது மற்றவருக்கு,அநியாயமல்லவா என்று
தோன்றுகிறது.
அதுவும் கோபத்திற்கு
மிகவும் இது பொருந்தும்.
ஆனால் நடைமுறையில்
கோபத்தை தூண்டும் இரு மிக அடிப்படை ஆதாரங்கள் உண்டு ஒன்று விரக்தி மற்றொன்று அடக்குமுறை அநியாயம்.
இயல்பாகவே எந்த ஒரு
உயிரும் மனிதனும் தனது தேவைக்கு எண்ணத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு,நிகழும் போது
சலிப்பும்,விரக்தியும் ஏற்படுவது இயல்பு
அதே போல தனது விருப்பம்
மற்றும் அகத்துக்கு மாறாக செயல்பட நிர்பந்திக்க படும் போது ஏற்படும்
வேதனையும் அச்சமும்
நிச்சயமாக எதிர்க்கும் விளைவை ஏற்படுத்தும் .
மற்றவர்களால் அல்லது
நிகழ்வுகளால் விரக்தியின் உச்சத்தில் அநியாய அடக்கு முறையின் சிகரத்தில் மனிதனின்
கொதி நிலை எல்லை தொடுகிறது எரிமலையாக வெடிக்கிறது. கோபமென வெளிபடுகிறது.
கட்டுபடுத்தி கொள்ளபட்ட
அல்லது வைக்கபட்ட செயல்கள் எல்லை மீறி பேச்சாக,அல்லது நடத்தையாக வெளிப்படும்.
அதீத நிலைகளில்
வன்முறை,பொருள்சேதம்,தற்கொலை,கொலை என்ற நிலைகளே அடையாளம்.
எனவே நிச்சயமாக கோபம் என்பது நடைமுறையில் பல
விரும்பதகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் நேர்மாறாக உணர்ச்சிகள் குறிப்பாக
அடக்குமுறையால்,அநீதியால் வஞ்சிக்கபடும் போது ஏற்படும் விரக்தி மற்றும்
வேதனைகள்,வலிகள் வெளிபடுத்தபடாமல் இருந்தாலும் நல்லதல்ல.
இந்த அடக்கி வைக்கப்பட்ட ஒடுக்கிவைக்கப்பட்ட
விரக்திகள்,வேதனைகள் காற்று நிரம்பிய பந்து நீருக்குள் இருந்து வெளிப்பட
அழுத்ததுடன் துடிப்பது போல மனஅழுத்தை ஏற்படுத்தும்.
சாதாரணமானவர்களுக்கு கோபம் என்பதே இயல்பான
சுலபமான வெளிப்பாடு என்பது நடைமுறை உண்மை.ஆனால் நன்றாக சிந்தித்து
பார்ப்போம்.உணர்ச்சிகளை எண்ணங்களை வெளிப்படுத்தாவிட்டால் அச்சம்,அழுகை,மன
அழுத்தமும்,மனசோர்வு அதிகமாகிறது.
கோபம் என்ற கதவின் வழி வெளிப்பட்டால்
பகை,இழிவு,அவமானம்,தோல்விஏற்படுகிறது.
மனிதர்கள் பாவம் அவர்
மனம் அதை விட பரிதாபம்
பிறகு அவர்கள்
எப்படித்தான் நிம்மதியாக அமைதியாக மகிழ்வாக வாழ்வது?
நாற்புறமும் தீயால்
சூழப்பட்டவனின் நிலைமை இரு தலைக் கொள்ளி எறும்பு போல என மக்கள் வர்ணிப்பார்கள். ஒரு
வீட்டின் கீழ்புறத்தில் நெருப்பு எரிகிறது. எல்லாம் பற்றி எரிய உயிரை கையில்
பிடித்து கொண்டு மொட்டை மாடிக்கு ஓடுகிறோம்.
அங்கிருந்து கீழே
குதிப்பதை தவிர வேறு வழியில்லை.குதித்தாலும் தலை உடையும் உயிர் போகுமென அஞ்சி
தவித்து குழப்பத்தின் உச்ச நிலையில் நிற்கிறோம்.
இதுவே கோபம் கொண்டவரின்
பரிதாப நிலை?
இதிலிருந்து மீள
வழியில்லையா இதுவே கேள்வி?
கோபத்தை கட்டுப்படுத்த
வேண்டியவர்கள் முதலில் கோபத்தினால் கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட
சம்பவங்களை,முதலில் பட்டியலிட வேண்டும்.
போஸ்ட் மார்ட்டம்
செய்வது போல நாம் அதை ஆய்வு செய்ய வேண்டும்.
நமக்கு ஏற்பட்ட பண
இழப்புகள்,பதவி இழப்புகள், நட்பு மாற்றங்கள் உறவு பகைகள்,வாய்ப்பு நழுவல்கள் போன்ற
இறந்த கால தீமைகளை தெளிவாக நினைவுகூர்ந்து நல்லது
அதை ஒரு பட்டியலாக
தயாரித்து எழுதுவது மிக அவசியம்
அதை மீண்டும் படிப்பது
கோபத்தை தவிர்க்க வேண்டியதின் அவசியத்தை நம் மன ஆழத்தில் பதியவைக்கும்.
கோபத்தின் தீய
விளைவுகளை பற்றிய தெளிவான உணர்வே கோபத்துக்கு அணை போடும் மிகச்சிறந்த சுவராகும்.
அது நமக்குள் தொடர்ந்து
விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வரும் முன் காப்பதற்கான
எச்சரிக்கை உணர்வை வலுப்படுத்தும்.
அதெல்லாம் நன்றாக
புரிகிறது.ஆனால் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.
இனி கோபமே படக்கூடாது
என்று குடிகாரரை போல சபதம் எடுத்தால் மறுநாள் அதை கட்டுபடுத்த இயலவில்லைஎன பலர்
புலம்புவார்கள்.
உண்மைதான்.தும்மல்,விக்கல்
போல கோபமும் பலருக்கு சுயக்கட்டுபாட்டை மீறிய அணிச்சை செயலாகி விட்டது உரசியதும்
மற்றும் தீக்குச்சி போல தொட்டதும் பட்டென்று வெடிக்கும் பட்டாசு போல பலருக்கு
கோபம்மிக இலகுவாக வருகிறது.
சிலருக்கு கோபம்
வரவழைக்க கூடிய தூண்டுதல்கள் மிக சிறியதாக இருந்தாலே போதும்
அவர்களுடைய விரக்தியை
தாங்கும் திறன் மிகவும் பலகீனமானதக அமைகிறது. நிறம் போல குணத்திலும் பல வண்ணமயமான
படைப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.
என்னதான் இயற்கையான
நிறமாயிருந்தாலும் மெருகேற்ற முடியும்
அது போல குணத்தையும்
படிப்பு,பக்குவம்,பயிற்சியினால் பண்பேற்ற முடியும்.கோபம் என்ற கரடுமுரடான தளங்களை
தேய்த்து குறைத்து பளபளப்பாக்க முடியுமே.
ஆனாலும் பலர் கோபம் அது
எங்கள் கூடப்பிறந்தது.மாறாதது மாற்ற முடியாதது என விரும்பியோ விரும்பாமலோ ஏற்று
கொள்கிறார்கள்.
இது தவறானது
எல்லாவற்றையும் விட மிக மோசமானது கோபத்தை நியாயப்படுத்தி கொள்வதுதான்.
வேறு வழியில்லை மற்றவர்
செய்யும் அநியாயங்களுக்கு எனது கோபம் நியாயமானதே என வாதிட துவங்குவது ஆபத்து
பழிக்கு பழி,கொலைக்கு
கொலை,தவறுக்கு தவறு என்பது போல கோபத்துக்கு நியாயம் கற்பித்து கொள்வது தீய
விளைவுகளில் போய் முடியும்.
No comments:
Post a Comment