எப்போதும் எல்லோரும்
மரியாதையுடன் "ஜி" போட்டு கூப்பிடுவது இந்திய
பண்பாடாக இருந்தாலும் தமிழர்
பண்பாடு இல்லைதான். நாமெல்லாம் "ஏங்க' "வாங்க" "போங்க" என்று பழைய மரபை
வீட்டுக் கொடுக்காமல் கடைபிடிக்கிறோம். இந்த "வெத்தல பாக்கு" கைப்பெசிகள்
(ஸ்மார்ட் போன் தான்) வந்தவுடன்
நமக்கும் இந்த தேசிய ஒருமைப்பாடு
இருக்கோ இல்லையோ "ஜி" போடும் பழக்கம் பத்திக்கிச்சு.
அது தான் 2 ஜி 3 ஜி
. இப்போ சமீபத்தில்
கலக்(ங்)கி கொண்டிருக்கும்
"ஜியோ ஜி" அதுதாங்க 4 ஜி. காத்தை
விக்கறதுக்கு (அலைக்கற்றை) முன்னால் சின்ன "ஜி"க்களில் நடந்த பெரிய ஊழல்களையெல்லாம்
நாம மறந்திருந்த வேளைகளில், இப்போ
யார் காத்தில அதிகமா படமும்
பேச்சும் அனுப்ப வைக்க முடியும்னு
ஒரு "மல்லுக்கட்டு". ஒரு கம்பெனி, பாறைக்கு அடியில பொய் ஒக்காந்துக்குங்க.
அப்பவும் நீங்க, நாங்க
கொடுக்குற அலை மூலமா மத்தவங்க
உங்களைத் துரத்திப் பிடித்து சமூக வலைத்தளங்களை விட்டு
விலக முயற்சிப்பவர்களை விட்டு விடாமல் முன்னெடுப்பு
அனுப்புதலால் ( forward message ) தொல்லை
குடுக்க வைப்போம்னு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் .
புதுசா
வந்த 4 ஜி நம் ஆட்டுமந்தை மக்களுடைய
அடிப்படை ஆசையான இலவசம் என்ற
தூண்டில் போட்டு சிக்கும் மீன்களை
தன்னுடைய பெரிய தொட்டியில் அடைக்கும்
முயற்சியை மிக சாதுரியமாக மேற்கொண்டு
வருகிறது. நாம் எல்லோரும் இந்த
காற்றுக்கு அடிமை பட்டு நம்முடைய
சுற்றம் சூழல் மற்றும் உடல்நலம்
இவை எல்லாவற்றையும் இந்த கைக்குள் (கைப்பெசி
மூலம்) அடக்கி வைக்க வேண்டிய
அவலம். இதன் மத்தியில் சமூக
வலைத்தளங்கள் மூலம் தனித்தனி குழு
அமைத்து தேவை மற்றும் தேவையல்லாத
தகவல்களை பகிர்ந்து பொழுதை கழிக்க வைக்கிறார்கள். புதிய
வியாதிகளின் ஆரம்பம். கழுத்து வலி, கை
விரல்களில் வலி, கண் வலி
மற்றும் இதை பார்த்துக்கொண்டே நடந்து,
ஓடி, வாகனங்களை இயக்கி விபத்துகளை உண்டாக்குவதை
கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த
"ஜி"க்கள் நமக்கு அவசியமாகத்
தோன்றினாலும் நம்மை படுகுழியில் தள்ள
வெகு நாட்களாகாது. காற்றை விற்பவர்கள் நாளை
நம் தினசரி வேலைகளை அவர்களே
தீர்மானிப்பவர்களாக மாறப்போவதில் சிறிதும் குழப்பமில்லை. வலைத்தளங்களின் கடவுள் "கூகிள்" ஆண்டவர் இப்பொழுதே நம்
வீட்டிலும் கைகளிலும் நம்முடைய சாதா மற்றும் சிறப்பு
கேள்விகளுக்கு பதில் கூறும் அதிசயத்திலிருந்து
விடுபட முயற்சிகள் எடுப்பது பயனற்றதாக போகிறது. நம்முடைய அன்றாட தேவைகளுக்கு இந்தக்காற்றை
நம்ப ஆரம்பித்தவுடன் நம்முடைய சிந்திக்கும் திறனும் இந்தியர்களுக்கே உரித்தான
அதீத ஞாபக சக்தியும் மொத்தமாக
அழிந்து வருகிறது.
இந்த ஜிக்கள் மூலம் காற்றை
சுவாசிக்க முடியாது. இவை தற்போது எரிந்து
கொண்டிருக்கும் பிரச்சினைகளை
மக்கள் மத்தியில் நேசத்தை உண்டாக்குவதற்கு மாறாக
பலவிதமான கலகங்களைப் பரப்புவதற்கே உபயோகப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நாம் எல்லோரும் சுத்தமான காற்றை சுவாசிக்கிறோமோ இல்லையோ
ஒலிக்கற்றைக் காற்றை
செவி, நாசி மற்றும் வாய்
வழியாகவும் உணர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த "ஜி"க்கள் நமது
வாழ்க்கைக்கு அவசியம்தான். ஆனால் எதிர்கால சந்ததியினர்
புத்திசாலிப் பிள்ளைகள். தகுந்த மரியாதை கொடுத்து தங்கள் நலனை பாதுகாப்பார்கள் என்று
எதிர்பார்ப்போம்.
"ஜிக்களுக்கு ஜே"
No comments:
Post a Comment